Breaking News
recent

நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி....???

குண்டா இருந்தாலும் சரி, ஒல்லியா இருந்தாலும் சரி உங்களால ஒரு பத்து மாடிப்படி ஏற முடியாம மூச்சு வாங்கினீங்கன்னா நீங்க அன்ஃபிட்டுன்னு நினைச்கோங்க. உங்களோட பி.எம்.ஐ கரக்டா இருக்கு; நீங்க குண்டா இல்ல; ஆனாலும் உங்களுக்கு மூச்சு வாங்குதுன்னா உங்களுக்கு சுத்தமா ஸ்டேமினா இல்லன்னு அர்த்தம். நீங்க அனிமிக்கா இருக்கீங்க; உங்களுக்கு அதிக எனர்ஜி தேவைப்படுத்துன்னு சுதாரிச்சுக்கோங்க.

ஒருவர் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை எப்படி தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

* குண்டா இருக்கோம்ன்றதுக்காக எக்காரணத்தைக் கொண்டும் சாப்பாட்டை குறைச்சு சாப்பிடவே கூடாது. அதனால் நம்ம உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு இன்னும்தான் குண்டாவீங்க. குண்டாக இருப்பவர்கள் போதுமான அளவு, தகுந்த இடைவெளியில சாப்பாடு சாப்பிடுவது முக்கியம்.

* ஃபிட்டாக இருப்பதற்கு முதல் விஷயம் தண்ணீர். வைட்டமின்களும், மினரல்களும் தண்ணீரில் இருந்துதான் நமக்கு கிடைக்கிறது. ஆனால் எல்லாரும் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. ஒவ்வொருவருக்கும் இந்த அளவு மாறுபடும். உங்களோட சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்திலோ, கலர்லெஸ்ஸாகவோ இருந்தால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். அதனால் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.

* எப்போது உடல் உழைக்கத் தொடங்குகிறதோ அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக, ஃபிட்டாக இருப்பீர்கள். தினமும் கண்டிப்பாக அரைமணி நேரம் நடப்பதையாவது வாடிக்கையாக்குங்கள். அதுவும் அதிகாலை வெயிலில் நடந்தால் வைட்டமின் – டி யும் உங்களுக்கு கிடைக்கும். நமது உடலில் கால்சியம் சேர்வதற்கு இந்த வைட்டமின் டி மிகவும் தேவை. வெயிலில் அதிக நேரம் இல்லாமல் இருப்பதால் தான் பலருக்கு இன்று வைட்டமின் – டி பிரச்னை வருகிறது.

அதனால் மூட்டு வலி, முதுகு வலி ஏற்படுகிறது. பத்து நாள் தொடர்ந்து நடைபயிற்சி செய்யுங்கள்; அப்புறம் பாருங்கள் படிக்கட்டு ஏறும்போது மூச்சு வாங்குதா என்று!

* ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்கள் என்றால் இன்னும் பிரச்சனைதான். என்னதால் ஒல்லியாக நீங்கள் இருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் தொப்பை போடுவது சகஜமான ஒன்றாகி விட்டது. இதனை அப்டாமினல் ஒபிசிட்டி என்று கூறுவார்கள். இ.எம்.ஐ கேல்குலேட்டர் போல, இடுப்புக்கும் வயிறுக்குமான அளவு சராசரியாக இவ்வளவு இருக்க வேண்டும் என்று உண்டு.

உங்களது வயிற்றின் சுற்றளவுடன், இடுப்பின் சுற்றளவை வகுத்தால் பெண்களுக்கு .85 க்குள் இருக்க வேண்டும். ஆண்களுக்கு .95 இருக்கவேண்டும். அதற்கு மேல் இருந்தால் நீங்கள் மிகவும் அன்ஃபிட்டாக இருக்கிறீர்கள் பாஸ். தயவுசெய்து கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக்கோங்க.

இரண்டு மணி நேர இடைவெளியிலாவது எழுந்து மாடிப்படி ஏறி இறங்குவது, ஐந்து நிமிடம் நடப்பது என கொஞ்சமாவது உடலுக்கு வேலை கொடுங்கள். இல்லையென்றால் தசைகள் வேலை செய்யாமல் அடிக்கடி மரத்துப் போவது, எலும்புகளில் வலி போன்றவை வரத்தொடங்கும். என்னதான் நீங்கள் வெட்டி முறிக்கும் வேலை செய்யாமல், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தாலும் உடல் வலிப்பதற்கு நீங்கள் உடலுக்கு வேலை கொடுக்காததுதான் காரணம்.
script javascript="" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js type=" text="">
lakshmi

lakshmi

No comments:

Post a Comment

Powered by Blogger.